சென்னையின் 2வது விமான நிலையம்.. பரந்தூருக்கு பதிலாக செய்யூர், கும்மிடிப்பூண்டி இடங்களைத் தேர்வு செய்தது தவெக அரசு!

 
பரந்தூர்  

சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதற்கான பணிகளைத் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காகச் செய்யூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய இரண்டு இடங்களை தவெக அரசு அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்துள்ளது.

தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த இரண்டு இடங்களிலும் முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வை உடனடியாக மேற்கொள்ளக் கோரி இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாகக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தத் திட்டத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள செய்யூர் தளமானது புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரு இடங்களில் எந்த இடம் விமான நிலையம் அமைக்க மிகவும் உகந்தது என்பது குறித்த சாத்தியக்கூறு ஆய்வுகள் நிறைவடைந்த பின்னரே இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.