மழையால் தத்தளிக்கும் சேப்பாக்கம்... துபாய் பறந்த உதயநிதி... மழை பாதிப்பு குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்றார்!
சென்னை முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் முதல்வரின் பெரம்பூர் தொகுதி, உதயநிதியின் சேப்பாக்கம் தொகுதி உட்பட பல இடங்களில் வெள்ளம் சூழ தொடங்கியது. சாலைகளில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் விடிய விடிய வெள்ள நீரை வடிய செய்து பணிகளில் ஈடுபட்டு சரி செய்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் துபாய் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் வடகிழக்கு பருவமழை பாதிப்புகள் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அவர் எந்தவித பதிலையும் அளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் சூழலில், மக்கள் சந்தித்து வரும் குறைகளைக் நேரில் கேட்டறியாமல் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் துபாய்க்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாக ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

சென்னையில் மழை நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் இந்தக் காலகட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவரின் இந்தப் பயணம் தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் எதிர்ப்பையும் கடுமையான விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
