“சேகர் பாபுவுக்கு செக்...” ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ்.பாபுவுக்கு தவெக அமைச்சரவையில் அறநிலையத்துறை ஒதுக்கீடு?!

 
பாபு பாபு

தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்த தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்த வெற்றி, கொளத்தூர் தொகுதியில் வி.எஸ்.பாபு ஈட்டிய வெற்றிதான். முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினைத் தோற்கடித்த வி.எஸ்.பாபுவுக்கு, அதற்குரிய அங்கீகாரத்தைப் புதிய அமைச்சரவையில் வழங்கத் தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.

திமுக ஆட்சியில் மிகவும் அதிகாரம் மிக்க மற்றும் பரபரப்பான துறையாகக் கருதப்பட்டது இந்து சமய அறநிலையத்துறை. இந்தத் துறையைச் சென்னை மாவட்டத்தின் திமுக வலுவான முகமான பி.கே.சேகர் பாபு கவனித்து வந்தார். தற்போது, அதே சென்னையில் திமுக தலைவரை வீழ்த்திய வி.எஸ்.பாபுவுக்கு, அதே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதவியை வழங்க விஜய் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

ஸ்டாலின் தேர்தல் தமிழகம்

கடந்த மூன்று ஆண்டுகளாகக் கொளத்தூர் தொகுதியில் தவெக-விற்காகத் தீவிரமாக உழைத்தவர் வி.எஸ்.பாபு. அந்த உழைப்பிற்கும், ஸ்டாலினையே வீழ்த்திய ஆளுமைக்கும் ஒரு 'பவர்ஃபுல்' துறையை வழங்க வேண்டும் என்பது விஜய் தரப்பின் எண்ணம். ஆன்மீக ரீதியிலான திட்டங்கள் மற்றும் கோவில் புனரமைப்புப் பணிகளில் சேகர் பாபு ஒரு முத்திரையைப் பதித்திருந்தார். அதே பாணியில், ஆனால் அதைவிடச் சிறப்பாகச் செயல்பட வி.எஸ்.பாபுவைப் போன்ற ஒரு துடிப்பான நபரை நியமிப்பது சரியாக இருக்கும் எனத் தவெக தலைமை கருதுகிறது.

நாளை விஜய்யுடன் அமைச்சர்களாகப் பதவியேற்கப் போகும் பட்டியலில் வி.எஸ்.பாபுவின் பெயர் முதல் சில இடங்களில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அவருக்கு அறநிலையத்துறையுடன் கூடுதலாகச் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையும் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.