கபடி பயிற்சியில் மார்பில் படுகாயம்... விரக்தியில் வாலிபர் தற்கொலை!
கபடி பயிற்சியின் போது மார்பு பகுதியில் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காததால் விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தளவாய்பட்டினம் சக்தி காளியம்மன் நகரில் வசித்து வருபவர் சக்திவேல். இவருடைய மகன் சந்துரு.

சந்துரு 12ம் வகுப்பு படித்து முடித்து விட்டு, சேலத்தில் தனியார் கபடி அகாடமி ஒன்றில் கபடி விளையாட்டு பயிற்சி பெற்று வந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கபடி பயிற்சியின் போது சந்துருவின் நெஞ்சுப்பகுதியில் பலத்த அடிபட்டுள்ளது.
இதற்காக அவர் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்தும், சிகிச்சைப் பலனளிக்காததால் விரக்தி அடைந்த சந்துரு நேற்று தூக்கில் தொங்கினார்.

இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர், சந்துருவை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சந்துருவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து அலங்கியம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயசாரதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கபடி வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
