சிகாகோ விமான நிலையத்தில் பச்சை நிறப் பறவை அட்டகாசம்! பயணிகள் அலறியடித்து ஓட்டம்... வைரல் வீடியோ!
அமெரிக்காவின் சிகாகோ ஓஹேர் சர்வதேச விமான நிலையத்தில் திடீரென நுழைந்த பச்சை நிறப் பறவை அது கிளியாக இருக்கலாம். அந்த பறவை பயணிகளைத் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கிளி போன்ற தோற்றமுடைய அந்தப் பறவை, டெர்மினல் 5 பகுதியில் உள்ள ஏர் பிரான்ஸ் செக்-இன் கவுன்ட்டர் அருகே பறந்து திரிந்தது.
Video showed an exotic green bird flying around inside of a terminal at Chicago O'Hare International Airport this week, according to a witness. https://t.co/yHEGC37agc https://t.co/1j3TJaE6Gx
— ABC 7 Chicago (@ABC7Chicago) October 18, 2026
ஆரம்பத்தில் பறவையைப் பார்க்க ஆர்வம் காட்டிய பயணிகள், அது ஆக்ரோஷமாக மாறி கொத்த முயன்றதால் அச்சமடைந்தனர். பயணிகளின் தலை மற்றும் உடைமைகள் மீதும் பறவை அமர்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு, விமான நிலையத் துப்புரவுப் பணியாளர் ஒருவர் தனது சட்டையைப் பயன்படுத்திப் பறவையைப் பிடித்தார். பின்னர் கால்நடை மருத்துவரிடம் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தால் விமானச் சேவைகளுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை என்றும், பயணிகளுக்குப் பெரிய காயங்கள் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
