சிக்கன் பிரியர்கள் மகிழ்ச்சி... கோழி இறைச்சிக் கடைகள் ஸ்ட்ரைக் வாபஸ்!
இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த கோழிக்கறி வணிகர்களின் காலவரையற்ற விற்பனை நிறுத்தப் போராட்டம் திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது சிக்கன் பிரியர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோழித் தீவனக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளைச் சரியாகப் பின்பற்ற வலியுறுத்தியும், கொள்முதல் விலை ஏற்ற இறக்கங்களைக் சீரமைக்கக் கோரியும் கோழிக்கறி வணிகர்கள் சங்கம் சார்பில் இந்தப் காலவரையற்ற போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
வணிகர்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனை தொடர்பாகக் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு பேச்சுவார்த்தை நடத்தி உரிய உத்தரவாதம் அளித்துள்ளது.

கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு அளித்த திருப்திகரமான உத்தரவாதத்தின் அடிப்படையில், திட்டமிட்ட போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக வணிகர்கள் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் காரணமாகத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் கோழிக்கறி கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்றும், கோழிக்கறி தட்டுப்பாடு ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
