"இந்தியா" கூட்டணி தலைவர்களைச் சந்திக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மறுப்பு!
தேர்தல் முறைகேடு புகார்கள் குறித்து விவாதிக்க நேரம் கோரிய "இந்தியா" கூட்டணித் தலைவர்களின் சந்திப்பு வேண்டுகோளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் நிராகரித்துள்ளார்.
தேர்தல் முறைகேடு புகார்கள் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த்தைச் நேரில் சந்தித்து ஆலோசிக்க "இந்தியா" கூட்டணித் தலைவர்கள் தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தக் கோரிக்கையைத் தலைமை நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை.
இது தொடர்பான விவகாரங்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கமாக நிலுவையில் இருப்பதால், தலைவர்கள் நேரடியாகச் சந்தித்துப் பேசுவது நிர்வாக ரீதியாகப் பொருத்தமானதாக இருக்காது என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அதேசமயம், இது தொடர்பாகத் தொடர்புடைய தரப்பினர் முறையான மனுவைத் தாக்கல் செய்தால், விதிகளின்படி அதனைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
