காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்க முதல்வர் உத்தரவு - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா!

 
ஆதவ் அர்ஜூனா ஆதவ் அர்ஜூனா

சென்னையில் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து முக்கியத் தகவல்களை வெளியிட்டார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டக் காவல்துறையினருக்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முழு சுதந்திரம் அளித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். காவல்துறையினரின் சுதந்திரத்தில் எந்தவிதமான குறுக்கீடுகளும் இருக்காது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ஆதவ்

காவல் நிலையங்களுக்குப் புகாரளிக்க வருபவர்களும், புகாரைப் பெறும் அதிகாரிகளும் அந்த நிகழ்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகளுக்குத் தமிழக அரசு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும். குண்டர் சட்ட எச்சரிக்கை மற்றும் மது ஒழிப்பு சட்டவிரோதச் செயல்களைத் தடுக்க அரசு எடுத்துள்ள கடுமையான நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கினார்:

போதைப்பொருட்களை விற்பனை செய்தாலோ அல்லது வாங்கினாலோ அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்பவர்களை உடனடியாகக் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகளின் தலையீடு எக்காரணம் கொண்டும் இருக்கக்கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதவ் விஜய்

சென்னையில் நிலவும் மின்சாரப் பிரச்சனைகள் மற்றும் வில்லிவாக்கம் பகுதிக்கான புதிய திட்டங்கள் குறித்து, மின்வெட்டு: சென்னையில் தற்போது நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்து அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் மின்சாரத்தைத் துண்டிக்கக் கூடாது என ஆணையிடப்பட்டுள்ளது.

வில்லிவாக்கம் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி மற்றும் அரசுப் பள்ளி ஆகியவற்றைத் தொடங்குவதற்காக அடுத்த 10 நாட்களுக்குள் நிலத்தைக் கண்டறிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.