இன்ஸ்டாவில் மாஸ் காட்டும் முதலமைச்சர்... 24 மணி நேரத்தில் 10 லட்சம் பாலோயர்ஸ் - புதிய சாதனை!

 
இன்ஸ்டா தமிழ்நாடு முதல்வர் இன்ஸ்டா தமிழ்நாடு முதல்வர்

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் சமூக வலைதளப் பக்கங்கள் தற்போது இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டாகி வருகின்றன. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளப் பக்கமான 'CMOTamilnadu', அவர் பதவியேற்ற குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. இதற்கு முன்பு 4.1 லட்சமாக இருந்த இன்ஸ்டாகிராம் பாலோயர்ஸ் எண்ணிக்கை, விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அடுத்த சில நிமிடங்களிலேயே மளமளவென உயரத் தொடங்கியது.

முதல்வர் விஜய்

விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற வெறும் 24 மணி நேரத்திற்குள், இந்த எண்ணிக்கை 1 மில்லியனை (10 லட்சம்) கடந்து புதிய சாதனை படைத்தது. திரையுலகைப் போலவே அரசியலிலும் அவருக்கு இருக்கும் மிகப்பெரிய ஆதரவை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இளைஞர்கள் மற்றும் சமூக வலைதளவாசிகள் மத்தியில் முதலமைச்சரின் செயல்பாடுகளுக்குக் கிடைத்துள்ள இந்த வரவேற்பு, டிஜிட்டல் தளத்தில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

விஜய்

தற்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து 2.1 மில்லியனை (21 லட்சம்) எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உள்ள பிற மாநில முதலமைச்சர்களின் சமூக வலைதளப் பக்கங்களுடன் ஒப்பிடுகையில், மிகக் குறைந்த காலத்தில் இவ்வளவு பெரிய பாலோயர்ஸ் எண்ணிக்கையைப் பெற்ற முதல் முதலமைச்சர் இவர்தான் எனக் கூறப்படுகிறது. அரசின் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமுடன் இந்தப் பக்கத்தைப் பின் தொடர்கின்றனர்.