25,000 பேருக்கு வேலைவாய்ப்பு; ரூ.1500 கோடி செலவில் ராணிப்பேட்டையில் காலணி தொழிற்சாலை... முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!

 
ராணிப்பேட்டை
 

ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் தைவானின் ஹாங்பூ நிறுவனம் சார்பில் 25,000 பேருக்கு வேலை வாய்பளிக்கும் ரூ.1500 முதலீட்டிலான தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

தைவானைச் சேர்ந்த ஹாங் பூ நிறுவனம், தோல் அல்லாத காலணி மற்றும் விளையாட்டுக்கான காலணிகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் சார்பில், ரூ.1500 கோடி முதலீட்டில் 25 ஆயிரம் பேருக்கு வேலையளிக்கும் காலணி தொழிற்சாலைக்கு தமிழக அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டம், பணப்பாக்கத்தில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த தொழிற்சாலை அமைய உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு நேற்று தலைமைச்செயலகத்தில் இருந்தபடியே காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 

முதல்வர்

இத்திட்டம் தொடர்பாக நிறுவனத்தின் தமிழக பிரிவு அதிகாரி அகில் பேசும்போது,‘‘ கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 7 ம் தேதி ரூ.1000 கோடி மற்றும் இந்தாண்டு ஜனவரி மாதம் ரூ.500 கோடி என ரூ.1500 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. கட்டுமானப்பணிகளை அடுத்தாண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளோம். டிசம்பருக்குள் பணிகளை முடித்து, உற்பத்தி தொடங்கப்படும். இந்த தொழிற்சாலையில்  நேரடியாக 25 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்கப்படும். இதில் 85 சதவீதம், பெண்கள் குறிப்பாக கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். வேலைவாய்ப்பு மேலும் அதிகரிக்கப்படும்’’ என்றார்.

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!