வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் துரை தயாநிதியை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்!

 
ஸ்டாலின்
 முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகியின் மகன் துரை தயாநிதிக்கு கடந்தாண்டு டிசம்பர் 6ம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், துரை தயாநிதிக்கு  அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

துரை தயாநிதி

தொடர் சிகிச்சைக்குப் பின்னர், துரை தயாநிதி புனர்வாழ்வு பயிற்சிக்காக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு கடந்த மார்ச் 14ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையுடன், புனர்வாழ்வு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவ வட்டாரத்தில் தெரிவித்திருந்தன. 
இந்நிலையில், வேலூர், அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக இன்று மதியம் வேலூர் சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் சிஎம்சி மருத்துவமனைக்குச் சென்று துரை தயாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

வேலூர் சிஎம்சி
இன்று மாலை 6 மணியளவில் வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.  முன்னதாக மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் சென்றிருந்த போது, மு.க.அழகிரியும், அவரது குடும்பத்தினரும் உடனிருந்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web