வைரல் வீடியோ... முதல்வர் ஸ்டாலின் சைக்கிளில் பாடலுடன் ஜாலி ரைடு... !

 
ஸ்டாலின்
 

 
 

தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு சுமார் பல கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.  அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜிம்முக்கு செல்வது, விளையாட்டு என தன் உடலை எப்போதும் சிக்கென வைத்து கொள்கிறார்.

 

அந்த வகையில் அமெரிக்காவில் முதல்வர்  ஸ்டாலின் காலையில் சைக்கிளில் ரைடு சென்றுள்ளார். அவர் ஜாலியாக பாட்டு படித்துக் கொண்டே சைக்கிள் ஓட்டிய வீடியோவை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  
முன்னதாக அவர் ஓட்டுனர்  இல்லாத காரில் பயணம் செய்யும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது சைக்கிளில் செல்லும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.  பொதுவாக பலரும் காரில் செல்வதையே விரும்பும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் ரிலாக்சாக சைக்கிளில் சென்றுள்ளார். அத்துடன்  அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்குகளும், பாராட்டுக்களும்  குவிந்து வருகிறது.

From around the web