“வெற்றிகள் நிறைந்த உடல் ஆரோக்கியத்துடன் நீண்டநாள் வாழ வேண்டும்”... சோனியா காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!
அமைதி, வெற்றிகள் நிறைந்த நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சோனியா காந்தி நீண்டநாள் வாழ வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சோனியா காந்தி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். சோனியா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், “காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். வலிமையான சவால்களை வழிநடத்துவது முதல் கருணையுடன் வழிநடத்துவது வரை, அவரது பயணம் பின்னடைவு மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக நிற்கிறது. அவர் வெற்றியும் அமைதியும் நிறைந்த நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
