கள் இறக்க அனுமதி - சட்டப்பேரவையில் அறிவிக்கிறார் முதலமைச்சர் விஜய்!

 
கள்

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி அளிக்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் விஜய் விரைவில் சட்டப்பேரவையில் வெளியிட உள்ளார்.

கள் என்பது இயற்கை சார்ந்த ஒரு விவசாய உற்பத்திப் பொருள் என்பதால், அதற்கான தடையை நீக்க வேண்டும் என கள் இயக்கத்தினரும், தென்னை மற்றும் பனை விவசாயிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

கள்

கேரளா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் கள் இறக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் அனுமதிப்பதால் லட்சக்கணக்கான பனை மற்றும் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் எனக் கருதப்படுகிறது.

விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவால், தென்னை மற்றும் பனை விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.