நடிகை திரிஷாவுடன் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய முதலமைச்சர் விஜய்!

 
த்ரிஷா

தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய், தனது பிறந்தநாளை ஒட்டி நடிகை திரிஷாவுடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி, விவாதப் பொருளாக மாறியுள்ளது.

ஜூன் 22 முதலமைச்சர் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள அவரது கட்சியினர், ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி விமரிசையாகக் கொண்டாடினர். இந்நிலையில், நடிகை திரிஷா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து முதலமைச்சருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அந்தப் புகைப்படத்தில் முதலமைச்சர் விஜய், நடிகை திரிஷா ஆகியோர் இணைந்து பிறந்தநாள் கேக் வெட்டுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

த்ரிஷா

திரைத்துறையில் 'கில்லி', 'திருப்பாச்சி', 'ஆதி' மற்றும் சமீபத்திய 'லியோ' உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் இணைந்து நடித்த இந்த வெற்றிக் கூட்டணியின் நிஜ வாழ்க்கைச் சந்திப்புப் புகைப்படம், வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளைப் பெற்று இணையத்தில் 'ட்ரெண்டிங்' ஆகி வருகிறது.

அரசியல் வட்டாரங்களின்படி, முதலமைச்சரின் பிறந்தநாளை ஒட்டி நடிகை திரிஷா அவரை நேரில் சந்தித்துத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதாகவும், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமே இது என்றும் கூறப்படுகிறது. திரைத்துறையிலிருந்து அரசியல் தலைவராகப் பரிணமித்துள்ள முதலமைச்சர் விஜய்க்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.