வி.எஸ்.பாபுவுக்கு கையில் முத்தமிட்டு ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!

 
கொளத்தூர் வி.எஸ்.பாபு

சென்னை கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.

கொளத்தூர் பாபு

உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி.எஸ்.பாபு, அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொளத்தூர் பாபு

மருத்துவமனைக்கு இன்று நேரில் சென்ற முதலமைச்சர் விஜய், வி.எஸ்.பாபுவின் படுக்கை அருகில் சென்று நலம் விசாரித்தார். அப்போது அவர், "எதைப் பத்தியும் கவலைப்படாம உடம்பை பார்த்துக்கோங்க. நான் இருக்கேன். சீக்கிரமா திரும்பி வந்து, அதே ஸ்டைல்ல கலக்கணும்" என்று கூறி பாசத்துடன் அவரது கையில் முத்தமிட்டு ஆறுதல் தெரிவித்தார்.