நாகூர் தர்காவுக்கு 45 கிலோ சந்தனக் கட்டைக்கான அரசாணை வழங்கினார் முதல்வர் விஜய்!

 
நாகூர் தர்கா சந்தனக்கட்டை

நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில் நடைபெறவுள்ள புகழ்பெற்ற கந்தூரி விழாவிற்காக, தமிழக அரசு சார்பில் 45 கிலோ விலையில்லா சந்தனக் கட்டைகளை வழங்குவதற்கான அரசாணையைத் தர்கா அறங்காவலர்களிடம் முதலமைச்சர் விஜய் நேரில் வழங்கினார்.

நாகூர் தர்கா

நாகூர் தர்காவில் இந்த ஆண்டுக்கான பெரிய ஆண்டவர் கந்தூரி விழா வரும் நவம்பர் 10-ஆம் தேதி தொடங்கி 14 நாட்கள் மிக விமரிசையாக நடைபெற உள்ளது. விழாவின் சந்தனம் பூசும் வைபவத்திற்காகத் தமிழக அரசு சார்பில் இரண்டாம் வகுப்புக்குரிய 45 கிலோ 'ஜைப்போகல்' சந்தனக் கட்டைகள் விலையில்லாமல் வழங்கப்படுகின்றன. இதற்கான அரசாணையைச் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் விஜய் தர்கா அறங்காவலர்களிடம் வழங்கினார்.

நாகூர்

இந்நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ஷாஜகான், தர்கா புனரமைப்புப் பணிகள் மற்றும் நாகூர் தர்காவிற்கு யானை வழங்கும் கோரிக்கைகள் முதலமைச்சரிடம் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அவர் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கந்தூரி விழாவைச் சிறப்பாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தனக்கட்டைகள் வழங்குவதில் வெளியான அரசியல் தலையீடு குறித்த தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இந்நிகழ்வின் போது அமைச்சர்கள் பர்வேஸ், ரஞ்சித்குமார் மற்றும் தர்கா அறங்காவலர்கள் உடனிருந்தனர்.