தமிழக அரசின் விளம்பரத்தில் நடிக்கிறார் முதல்வர் விஜய்.. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார்!

 
முதல்வர் விஜய்

தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் அரசுச் செயல்பாடுகளைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் உருவாக்கப்பட உள்ள சிறப்பு விழிப்புணர்வு விளம்பரப் படத்தில் முதலமைச்சர் விஜய் நேரடியாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, அரசின் பல்வேறு முதன்மைத் திட்டங்களைக் கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் முதலமைச்சர் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். இந்த அரசு விளம்பரப் படத்தை தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரையரங்கு தியேட்டர் விஜய்

முதலமைச்சர் விஜய்யின் தீவிரமான அரசுப் பணிகளுக்கு இடையே, இந்த விளம்பரப் படத்தின் படப்பிடிப்பிற்காக அவர் சிறப்பு ஒதுக்கீடாக இரண்டு நாட்கள் ஒதுக்கியுள்ளார். பொதுவாக அரசின் திட்டங்கள் காட்சி ஊடகங்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்லப்படும். ஆனால், மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்குக் கொண்ட முதலமைச்சர் விஜய்யே நேரடியாக இந்த விழிப்புணர்வு விளம்பரத்தில் தோன்றி நடிக்கவுள்ளது கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.

முதல்வர் விஜய் பயணம் வெளிநாடு புறப்பாடு வருகை

அரசின் நலத்திட்டங்கள், இலவச உதவிகள் மற்றும் தொலைநோக்குத் திட்டங்கள் குறித்துப் பொதுமக்கள் சுலபமாகப் புரிந்து கொள்ளும் வகையில் மிக நேர்த்தியாக இந்த விளம்பரம் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட உள்ளது. விரைவில் இதற்கான படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.