இன்று புதுக்கோட்டை செல்கிறார் முதல்வர் விஜய்... ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்!

 
முதல்வர் விஜய் பயணம் வெளிநாடு புறப்பாடு வருகை

இன்று தமிழக முதல்வர் விஜய் புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.19 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் மற்றும் புதிய உள் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை நேரில் திறந்து வைக்கிறார். முதல்வரின் வருகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

புதுக்கோட்டை சத்தியமூர்த்தி சாலையில் ரூ.19 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார். மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படவுள்ளது. இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.

முதல்வர் விஜய் பயணம் வெளிநாடு புறப்பாடு வருகை

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய், அங்கிருந்து ரோடு ஷோ மூலம் புதுக்கோட்டையை அடைகிறார். விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்யின் இந்த அரசு விழா மற்றும் புதுக்கோட்டை வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தவெக விஜய்

முதலமைச்சரின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, இன்று புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் டிரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கீரனூர், மாத்தூர், வெள்ளனூர் உள்ளிட்ட முதலமைச்சர் பயணிக்கும் வழித்தடங்கள் மற்றும் பிரதான சாலைகளில் அமைந்துள்ள 13 அரசு டாஸ்மாக் கடைகளை இன்று முழுவதும் மூட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.