நாளை இரவு துபாய் வழியாக லண்டன் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய தொழிலதிபர்களைச் சந்திக்கத் திட்டம்!

 
விஜய் எமிரெட்ஸ் வெளிநாட்டு வெளிநாடு

தமிழக முதலமைச்சர் விஜய் பல்வேறு அரசுப் பணிகள் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக நாளை இரவில் துபாய் வழியாக லண்டன் புறப்பட்டுச் செல்கிறார். 

முதலமைச்சர் விஜய் நாளை இரவு 10 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் துபாய் வழியாக லண்டனுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபர்களைச் சந்தித்துப் பேசி, தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பது குறித்து அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

லண்டன் பயணத்தின் போது, பிரபல நடிகர் அஜித்குமாரின் கார் பந்தயத்தைக் நேரில் பார்வையிட உள்ளதாகவும், அப்போது அஜித்தைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லண்டன் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு அவர் மீண்டும் சென்னை வந்தடைகிறார்.