பெரம்பூர் தொகுதிக்கு முதல்வர் விஜய் திடீர் விசிட்... பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார்!
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்திற்குத் திடீர் பயணம் மேற்கொண்டு பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
பெரம்பூர் தொகுதி அலுவலகத்திற்கு திடீரென வருகை தந்த முதலமைச்சர் விஜய், அங்குத் திரண்டிருந்த பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு குறைகளைக் கேட்டறிந்தார். மக்களின் கோரிக்கைகள் மீது துறை ரீதியான விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

அந்த அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் இ-சேவை மையத்தில், வருமானச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்திருந்த பயனாளிக்கு நேரடியாக வருமானச் சான்றிதழை வழங்கிச் சிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து, மாதவரம் பால் பண்ணையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ₹2 கோடி மதிப்பிலான புதிய கட்டிடத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். மேலும், அங்குப் பால் பண்ணையின் செயல்பாடுகளை ஆய்வு செய்ததோடு, புதிய வசதிக்கான கட்டுமானப் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
