சாலமன் பாப்பையா மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு - முதல்வர் விஜய் இரங்கல்!

 
சாலமன் பாப்பையா

புகழ்பெற்ற தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.

தமிழின் பெருமையையும் தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த சாலமன் பாப்பையா மறைந்த செய்தி மிகுந்த துயரத்தையும் வேதனையையும் அளிப்பதாக முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

குட் நியூஸ்! இயல், இசை, நாடக மன்ற தலைவராகும் சாலமன் பாப்பையா..!

நகைச்சுவை கலந்த பேச்சாலும் ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும் சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததுடன், பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வாக இல்லாமல் சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் அவரது பங்கு மகத்தானது என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

சாலமன் பாப்பையாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.