ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா - முதல்வர் விஜய் புகழாரம்!

 
ராஜ ராஜ சோழன் சதய விழா தஞ்சாவூர்

மாமன்னர் ராஜராஜ சோழனின் 1041-வது பிறந்தநாளையொட்டி (சதய விழா), தமிழக முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் புகழ் வணக்கம் செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் தஞ்சை பெரிய கோயில் மூலம் தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் கட்டடக் கலையின் சிறப்பை உலகரங்கில் நிலைநாட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் பெருமை என்றும் நிலைத்து நிற்கும்," என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழர்களின் பெருமையையும் பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.