காவலர்களுக்குப் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார் முதலமைச்சர் விஜய்!

 
காவலர்களுக்குப் பதக்கங்கள் விஜய்

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற கம்பீரமான விழாவில், காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகளுக்கும் காவலர்களுக்கும் முதலமைச்சர் விஜய் பதக்கங்கள் மற்றும் விருதுகளை வழங்கிப் பாராட்டினார். விழாவிற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அணிவகுப்பைப் பார்வையிட்ட முதலமைச்சர், காவல்துறையினரின் கம்பீரமான செயல்பாடுகளுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

குற்றங்களைத் தடுத்தல், சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல் மற்றும் புலனாய்வுத் துறையில் சிறந்த முறையில் பணியாற்றிய காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் சீருடைப் பணியாளர்களுக்குத் தமிழ்நாடு அரசின் தகுதியுரைச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை அவர் வழங்கினார்.

இத்துடன், காவல்துறையினரின் பணிகளை ஊக்குவிக்கும் விதமாக, சிறப்பாகச் செயல்பட்ட ஊழியர்களுக்குச் சிறப்பு வாகனத்தைப் பரிசாக வழங்கி முதலமைச்சர் விஜய் கெளரவித்தார். இவ்விழாவில் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) மற்றும் உயர் காவல் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.