தியாகி இமானுவேல் சேகரனாருக்கு முதலமைச்சர் விஜய் வீர வணக்கம்!

 
இமானுவேல் சேகரனார்

சமூக நீதிக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் விஜய் அவருக்கு வீர வணக்கம் செலுத்தியுள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  சமத்துவம், சுயமரியாதை மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காக அவர் நடத்திய போராட்டங்கள் என்றும் போற்றத்தக்கவை என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இமானுவேல் சேகரன்

இமானுவேல் சேகரனார் காட்டிய வழியில் ஏற்றத்தாழ்வற்ற சமுதலாயத்தை உருவாக்கி, சமத்துவமும் சகோதரத்துவமும் தழைத்தோங்க அனைவரும் உறுதியேற்போம் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.