அச்சரப்பாக்கத்தில் செப்.25-ம் தேதி முதல்வர் விஜய் தீவிர தேர்தல் பிரச்சாரம்!

 
விஜய் பிரச்சாரம்

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி மாநிலத்தின் முதலமைச்சர் விஜய் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அச்சரப்பாக்கம் மேல்நிலைப் பள்ளிக்கு அருகிலுள்ள மைதானத்தில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் மற்றும் பிரச்சாரத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

விஜய் பிரச்சாரம்

அச்சரப்பாக்கம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில், பிரத்யேகப் பிரச்சார வேனில் நின்றவாறே முதலமைச்சர் விஜய் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரிக்க உள்ளார்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் பங்கேற்கும் முதல் தேர்தல் பிரச்சாரம் என்பதால், இப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரக் கண்காணிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.