புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக இன்று முதல்வர் விஜய் ஆலோசனை!

 
தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இடம் தேர்வு உள்ளிட்டவை தொடர்பாக முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவைக் கட்டிடங்களை சென்னை மாநகராட்சி எல்லைக்குள்ளேயே கட்டுவதா அல்லது புறநகர்ப் பகுதியில் அமைப்பதா என்பது குறித்தும் இதில் தீவிரமாக ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. 

vijay

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த முக்கிய அமைச்சர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவுள்ளனர். அரசின் முக்கியப் பணிகளை விரைவுபடுத்துவதற்கும் பொதுமக்களுக்கு எளிதில் சேவை வழங்குவதற்கும் இந்த புதிய கட்டடங்கள் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நகரப் பகுதியில் நிலவும் இட நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் எதிர்காலத் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் விரைவில் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.