மீனாட்சி அம்மனை தரிசிக்கிறார் முதல்வர் விஜய்... செ.28ல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் மதுரையில் தொடக்கம்!

 
மீனாட்சி அம்மன் விஜய்

அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்த புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மீனாட்சி

தமிழகத்தில் தாய்மாமன் சீர் முறைக்கு மிகவும் பெயர் பெற்ற பகுதியான உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெண்களுக்கு 'தாய்மாமன் சீர்' வழங்கும் பாரம்பரிய கலாசாரம் மிக அதிகமாக உள்ளது. ஏழை எளிய குடும்பங்கள் கூடக் கடன் வாங்கியாவது தங்களது மருமகள்களுக்கு இந்த சீரினைச் செய்யும் உணர்வுப்பூர்வமான கலாசாரத்தோடு பொருந்திப் போகும் வகையில் இத்திட்டத்தை அங்கிருந்து தொடங்க முதலில் திட்டமிடப்பட்டது.

இருப்பினும், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டு, இந்த 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் வரும் 28 ம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதலமைச்சர் விஜயால் தொடங்கி வைக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்

மதுரையில் புதிய திட்டத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளும் முதலமைச்சர் விஜய், அதனைத் தொடர்ந்து சமீபத்தில் கும்பாபிஷேகம் கண்டு களித்த வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு நேரில் சென்று சாமி தரிசனம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.