முதல்வர் விஜய் இன்று ஆந்திரா பயணம்.. சந்திரபாபு நாயுடுவுடன் நதிநீர் பங்கீடு குறித்து முக்கியப் பேச்சுவார்த்தை - முழு பயண விபரம்!

 
விஜய்சந்திரபாபு

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் அரசு முறைப் பயணமாக இன்று பிற்பகல் ஆந்திரப் பிரதேசம் செல்கிறார். ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து, சென்னையின் குடிநீர் தேவை மற்றும் இரு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைகள் குறித்து அவர் தீவிர ஆலோசனை நடத்த உள்ளார்.

தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால், நடப்பாண்டில் அக்டோபர் மாதத் தொடக்கம் வரை வெறும் 2.251 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே தமிழகத்திற்குக் கிடைத்துள்ளது. இது குறித்த கோரிக்கைகள் சந்திப்பின்போது முக்கியமாக எழுப்பப்படும்.

விஜய்சந்திரபாபு சந்திரபாபுவிஜய்

கோதாவரி - கிருஷ்ணா - காவிரி நதிநீர் இணைப்புத் திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் அதன் சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. மேலும், தமிழக எல்லையை நோக்கிப் பாயும் நதிகளின் குறுக்கே ஆந்திர அரசு புதிய அணை கட்டத் திட்டமிட்டுள்ளதாக எழுந்துள்ள புகார்கள் குறித்தும், அதனால் தமிழகத்திற்கேற்படும் கவலைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

இந்த உயர்மட்டச் சந்திப்பின் போது, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தும் உடன் கலந்துகொண்டு விவாதிக்க உள்ளார். மேலும், ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மற்றும் சில அமைச்சர்களையும் முதல்வர் விஜய் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். இன்று மதியம் 2 மணி: சென்னையில் இருந்து விமானம் மூலம் ஆந்திராவுக்குப் புறப்படுகிறார்.

முதல்வர் விஜய் பயணம் வெளிநாடு புறப்பாடு வருகை

மாலை 3:30 மணி ஆந்திராவில் உள்ள ஞானாவரம் (கன்னாவரம்) விமான நிலையத்தைச் சென்றடைகிறார். மாலை 4:15 மணி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். மாலை 6 மணி விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்கா கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்கிறார். இரவு 8:30 மணி விஜயவாடாவில் உள்ள நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.