'பெரியார் அறிவுலகம்' திறந்து வைக்க கோவை செல்கிறார் முதல்வர் விஜய் - அக்.16ல் பிரம்மாண்ட விழா!

 
வெளிநாடு வெளிநாட்டில் மகிழ்ச்சி விஜய்

கோவையில் சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 'தந்தை பெரியார் அறிவுலகம்' நூலகம் மற்றும் அறிவியல் மையத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைப்பதற்காகத் தமிழக முதலமைச்சர் விஜய் கோவைக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் சுமார் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில், பிரம்மாண்டமான முறையில் 8 தளங்களுடன் இந்த அறிவுசார் மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் பயன்படும் வகையில் நவீன டிஜிட்டல் நூலகம், அறிவியல் மையம், கோளரங்கம் (Planetarium) மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான பிரத்யேகப் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் தொழில்நுட்ப அடைக்காப்பக மையங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இத்திட்டத்தின் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ள  நிலையில், மக்கள் பயன்பாட்டிற்காக இதனைத் திறந்து வைக்கத் தமிழக முதல்வர் விஜய் கோவை செல்கிறார். இந்த விழாவைத் தொடர்ந்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.