திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்... பிரம்மாண்ட ரோடு ஷோ... அரசு மருத்துவமனை கட்டிடம் திறப்பு விழா!

 
விஜய்

தமிழக முதலமைச்சர் விஜய் நவம்பர் 20-ம் தேதி திருச்சிக்கு செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  திருச்சியில், புத்தூர் பகுதியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை நவம்பர் 20ம் தேதி முதல்வர் விஜய் திறந்து வைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. 

 

View this post on Instagram

A post shared by News18.com (@cnnnews18)

மேலும், திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக நவம்பர் 20-ஆம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் செல்லும் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் பயணத்தின்போது ரோடு ஷோ நடத்தவும், வழிநெடுகிலும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடுகள் நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தவெக விஜய்

முதல்வரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் தொடர்பாகவும் ஆலோசனைகள் நடைபெற வாய்ப்புள்ளது. இருப்பினும், பயணத் திட்டம் மற்றும் நிகழ்ச்சி விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.