இன்று வண்டலூர் செல்கிறார் முதல்வர் விஜய்... காவலர் பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்பு!
இன்று தமிழக முதல்வர் விஜய், வண்டலூர் செல்கிறார். வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரியில் தமிழ்நாடு காவல் அகாடமி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர்கள் அதிகாரிகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் முதல்வர் கலந்துக் கொள்கிறார்.

14-வது பயிற்சி பிரிவு டிஎஸ்பி அதிகாரிகளுக்கான இந்த அணிவகுப்பு இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் முதல்வர் விஜய் பங்கேற்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ள உள்ளார்.
பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை முதல்வர் விஜய் வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் காவல்துறை மற்றும் அரசின் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

முதல்வர் வருகையையொட்டி வண்டலூர், ஊனமாஞ்சேரி மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.முதல்வர் விஜய் சமீபத்தில் பல்வேறு அரசு மற்றும் தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நிலையில், வண்டலூரில் நடைபெறும் காவல்துறை பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்க உள்ளதும் கவனம் பெற்றுள்ளது.
