வடகிழக்கு பருவமழை தீவிரம் - பொறுப்பு அமைச்சர்கள் அனைவரும் உடனடியாக சென்னை திரும்ப முதல்வர் விஜய் உத்தரவு!

 
ஆலோசனை விஜய் முதல்வர்

சென்னையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை மண்டல வாரியாக மேற்பார்வையிடுமாறு பொறுப்பு அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

மழை கனமழை ஆட்டோ

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் சூழலில், மண்டல வாரியாகப் பணிகளை உடனுக்குடன் கவனிக்க நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் ரமேஷ், லோகேஷ் தமிழ்செல்வன், அருண்ராஜ், விஜய் பாலாஜி, பிரபு, விஜய் தமிழன் பார்த்திபன் மற்றும் விக்னேஷ் உள்ளிட்டோர் உடனடியாக இன்றே சென்னைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.