ஆக.15 சுதந்திர தினத்தில் முதன்முறை தேசியக் கொடியேற்றும் முதல்வர் விஜய் - வைகோவுக்கு தகைசால் தமிழர் விருது!
ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறும் நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழக முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தவுள்ளார்.
தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றிய சிறந்த ஆளுமைகளைப் பெருமைப்படுத்தும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் 'தகைசால் தமிழர் விருது' வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டுகளில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் என்.சங்கரைய்யா, ஆர்.நல்லகண்ணு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் இவ்விருதைப் பெற்றுள்ளனர். இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதாளரைத் தேர்வு செய்வதற்காகத் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த அரசியல் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரது பெயர்கள் அரசின் முதன்மைப் பரிசீலனையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
