புழல் மத்திய சிறையில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு!
Aug 28, 2026, 13:04 IST
சென்னை புழல் மத்திய சிறைக்குச் சென்ற தமிழக முதலமைச்சர் விஜய் அங்குள்ள வசதிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
தமிழக உயர் அதிகாரிகள் மற்றும் சிறைத் துறை அதிகாரிகளுடன் இணைந்து முதலமைச்சர் விஜய் இன்று காலை புழல் மத்திய சிறைக்கு திடீர் ஆய்வுக்காகச் சென்றுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் தற்போதைய நிலை, அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, சமையல் கூடம் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தி வருகிறார்.
முதல்வர் சிறைக்கு வருகை தந்துள்ளதை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, சிறிது போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
