மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு புதிய நலத்திட்டங்கள் அறிவித்தால் முதல்வர் விஜய்!

 
முதல்வர் முதலமைச்சர் விஜய்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டங்களை முதலமைச்சர் விஜய் இன்று அறிவித்துள்ளார்.

அதன்படி, மதுராந்தகம் தொகுதியில் அச்சரப்பாக்கத்தில் 20 கோடி ரூபாய் செலவில் புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும். மதுராந்தகம் ஏரிப் பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நவீன பொழுதுபோக்கு பூங்கா உருவாக்கப்படும். புக்கத்துறை ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படுவதுடன், இப்பகுதியில் விவசாயிகளின் வசதிக்காக 6 புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.

மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தல்

இதே போல், தாராபுரம் தொகுதிக்கான அறிவிக்கப்பட்டுள்ள முக்கியத் திட்டங்களில் தாராபுரம் பகுதியில் பொதுமக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் 1,439 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்ட கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்குப் பயனளிக்கும் வகையில் 13,000 புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.

தாராபுரம்

மூலனூர் பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஏற்று முதல்வர் விஜய் அறிவித்துள்ள இந்த நலத்திட்டங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.