முதலமைச்சர் விஜய் இன்று டெல்லி பயணம்; பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்!

 
தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

தமிழக முதலமைச்சர் விஜய், முதல்வரான பின்னர் முதன்முறையாக இன்று டெல்லிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். அவர் இன்று நாடாளுமன்ற வளாகத்திலுள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துப் பேச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதல்வர் விஜய்

இன்று நடைபெறவிருக்கும் இந்த சந்திப்பின் போது, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிதி நிலுவைத் தொகைகள் குறித்துப் பிரதமர் மோடியுடன் ஆலோசனைகள் மேற்கொள்வார் என்று தெரிகிறது.

குறிப்பாக, தமிழகத்தின் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்கள், புதிய கல்விக்கொள்கை குறித்த மாநிலத்தின் நிலைப்பாடு மற்றும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் அடுத்தகட்டப் பணிகளுக்கான மத்திய அரசின் நிதி ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அவர் பிரதமரிடம் நேரடியாக வழங்கவுள்ளார்.

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான இத்தகைய இணக்கமான சந்திப்புகள், தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை எவ்விதத் தொய்வுமின்றி அடுத்தகட்டத்திற்கு விரைவாகக் கொண்டு செல்லப் பெரிதும் உதவும் என்று அரசியல் மற்றும் அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.