தாராபுரத்தில் முதல்வர் விஜய் பிரச்சாரம் - காலை முதலே குவிந்து வரும் தொண்டர்கள்!

 
விஜய் பிரச்சாரம்

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் பி. சத்தியபாமாவை ஆதரித்து, தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் இன்று மாலை பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். தாராபுரம் சித்ராவுத்தன்பாளையம் மாருதி நகர் பகுதியில் இன்று மாலை 3 மணியளவில் இந்தக் கூட்டமானது நடைபெற உள்ளது.

விஜய் பிரச்சாரம்

பொதுக்கூட்டத்தைக் காணவும், முதலமைச்சர் விஜய்யின் உரையைக் கேட்கவும் காலை முதலே பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பகுதிகளில் இருந்தும் தவெக தொண்டர்களும் பொதுமக்களும் தாராபுரத்தில் குவியத் தொடங்கியுள்ளனர்.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு ஏற்பாடுகளைச் பலப்படுத்தவும் QR குறியீடு கொண்ட பிரத்யேக அனுமதி அட்டை பெற்ற நபர்கள் மட்டுமே கூட்டத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.