முதல்வர் விஜய்யின் பிரச்சார வாகனம் மதுராந்தகம் நோக்கிப் புறப்பட்டது - வேகமெடுக்கும் இடைத்தேர்தல் களம்!

 
பிரச்சார வாகனம் விஜய் தேர்தல் பரப்புரை

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரப் பணிகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய், மதுராந்தகத்தில் இன்று பிற்பகல் தீவிரத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

மதுராந்தகம் இடைத்தேர்தல் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக, பிரசார வாகனத்தின் மேல் நின்றபடி பொதுமக்களைச் சந்தித்துப் பேசவிருக்கும் முதலமைச்சர் விஜய்யின் வாகனம் இன்று காலை மதுராந்தகம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.

இடைத்தேர்தல் விஜய் பிரச்சாரம் பரப்புரை தேர்தல்

முதலமைச்சரின் வருகையையொட்டி அப்பகுதியில் உள்ள தவெக தொண்டர்களும் நிர்வாகிகளும் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

பாதுகாப்பு மற்றும் நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக, இந்தப் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளக் காவல் துறையின் அனுமதியுடன் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார். மேலும் முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் சிறுவர்கள் கூட்டத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.