முதல்வர் விஜய்யின் கான்வாய் விபத்தில் சிக்கியது... சென்னை திருவான்மியூரில் பரபரப்பு!

 
விஜய் கான்வாய்

மெட்ரோ இரயில் ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்டு முதலமைச்சர் விஜய் அவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அவரது பாதுகாப்புப் படையில் இருந்த கான்வாய் வாகனங்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் சென்னை திருவான்மியூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவான்மியூர் ஆர்.டி.ஓ சிக்னல் அருகே முதலமைச்சரின் கான்வாய் வாகனங்கள் இடதுபுறப் பாதையில் சென்று கொண்டிருந்தன. அப்போது அந்தப் பாதையில் சென்ற அடையாளம் தெரியாத தனியார் கார் ஒன்று திடீரென வலதுபுற ட்ராக்கிற்கு மாறியுள்ளது. இதைக் கண்டு நிலைமையைச் சமாளிக்க கான்வாய் வாகனங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டன. அந்த சமயம் கான்வாயில் பயணித்த அடையார் காவல் துணை ஆணையரின் கார் திடீரெனச் சடன் பிரேக் அடித்து நின்றது.

விஜய் கான்வாய்

துணை ஆணையரின் கார் திடீரென நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பின்னால் வந்த டெம்போ டிராவலர் வாகனத்தின் ஓட்டுநர் பிரேக் பிடித்தும் நிற்காமல் நிலைகுலைந்து முன்னால் இருந்த காரின் மீது பலமாக மோதியது. இந்த எதிர்பாராத மோதலில் கான்வாயில் வந்த காவல் துணை ஆணையரின் கார் மற்றும் டெம்போ டிராவலர் ஆகிய இரண்டு வாகனங்களின் பாகங்கள் பலத்த சேதமடைந்தன.

முதல்வர் கான்வாய் போக்குவரத்து விஜய் கார்

முதலமைச்சரின் பிரதான வாகனம் பாதுகாப்பாகச் சென்றடைந்த நிலையில், இந்த சம்பவம் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.