முதல்வர் விஜய்யின் விமானப் பயணத்திற்கு மட்டும் ரூ.3.55 கோடி செலவு - வெளியான முழு செலவுக் கணக்கு விபரம்!

 
விஜய் பிரச்சாரம்

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் செலவுகள் குறித்த அதிகாரப்பூர்வ கணக்குகள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக ரூ.19.81 கோடி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில், பல்வேறு முக்கிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் பிரச்சாரத்தின்போது கட்சித் தலைவர் சி.ஜோசப் விஜயின் விமானப் பயணத்திற்காக மட்டும் ரூ.3.55 கோடி செலவிடப்பட்டுள்ளது. மார்ச் 14 முதல் ஏப்ரல் 28 வரையிலான காலகட்டத்தில் இந்தச் செலவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டணங்கள் TAJ Events Pvt Ltd, Chipsan Aviation Pvt Ltd மற்றும் Fly High Global Aircraft Management Services Pvt Ltd ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தவெக விஜய்

தேர்தல் பிரச்சாரத்திற்காக ஊடக விளம்பரங்களுக்கு அதிகபட்சமாக ரூ.6.35 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் அச்சு, மின்னணு மற்றும் வானொலி விளம்பரங்கள் அடங்கும். மேலும், பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்காக ரூ.2.06 கோடியும், விளம்பரப் பொருட்களுக்காக ரூ.40.55 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காஅமன் நிறுவனத்திற்கு ரூ.1.79 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விஜய் பிரச்சாரம் தேர்தல் இடைத்தேர்தல்

தேர்தலில் போட்டியிட்ட தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி ஆகிய இரண்டு தொகுதிகளுக்காக ரூ.40 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், கட்சியின் மற்ற வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவுகள் எதையும் கட்சித் தலைமை ஏற்கவில்லை எனவும் அந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.