முதலமைச்சர் விஜய்யின் உண்மையான சாயம் வெளுக்கிறது - ஆர்.பி. உதயகுமார்!

 
உதயகுமார்

புதிய அரசின் ஆட்சிக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதாகவும், விலைவாசியைக் கட்டுப்படுத்தத் தவறியதன் மூலம் முதலமைச்சர் விஜய்யின் உண்மையான சாயம் வெளுத்து வருவதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அரசின் நிர்வாகக் காலகட்டத்தில் காய்கறிகள், அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

உதயகுமார்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த விலை உயர்வின் காரணமாக, குடும்பத்தின் மாதாந்திரச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சியடைந்து அவதிக்குள்ளாகி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய விலைவாசி உயர்வை உடனடியாகக் கட்டுப்படுத்தத் தவறியதன் மூலம், முதலமைச்சர் விஜய்யின் முகமூடி கழன்று அவரது உண்மையான நிர்வாகத் திறன் வெளிப்பட்டு வருவதாக அவர் சாடியுள்ளார்.