முதல்வர் பேச்சு ஏற்கனவே பலமுறை பேசப்பட்டவை தான்... அவைக் குறிப்பிலிருந்து நீக்க முடியாது... சபாநாயகர் திட்டவட்டம்!

 
சபாநாயகர்

சர்க்காரியா கமிஷன் மற்றும் மிசா கைது உள்ளிட்டவை குறித்து ஏற்கனவே இந்த அவையில் பலமுறை பேசப்பட்டதைதான் முதலமைச்சர் பேசினார் என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று திமுகவினர் வைத்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து பேசிய அவர் இந்த விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அமலாக்கத்துறை அறிக்கையில் கூறியதையே முதலமைச்சரும் கூறினார் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

சட்டசபை சட்டப்பேரவை விஜய் முதல்வர் பட்ஜெட்

முதலமைச்சர் பேசியதில் இருந்து எதையும் நீக்க வேண்டிய அவசியமில்லை என்றும் சபாநாயகர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். சபாநாயகரின் இந்த விளக்கத்தைத் தொடர்ந்து அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

சபாநாயகரின் அறிவிப்பைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பேரவையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.