முதல்வர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பரபரப்பு... பரிசுப் பொருட்களை வாங்க முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு!

 
முதல்வர் மா சுப்ரமனியன்

சென்னை சைதாபேட்டையில் தி மு க சார்பில் நடைபெற்ற முதல்வர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் வழங்கபட்ட

பரிசு பொருட்களை வாங்க பொது மக்கள் முந்தியடித்துக் கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக சார்பில் முதல்வர் 61வது பிறந்தநாள் மட்டும் பொது கூட்டம் நிகழ்ச்சி சென்னை சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பதை அருகே நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா சுப்பிரமணியன் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் திமுக பேச்சாளரும் நடிகருமான போஸ் வெங்கட் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்தவுடன்  அங்கு கூடி இருந்த பொது மக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் முதல்வர் பிறந்த நாள் பரிசாக பெரிய பக்கெட் மற்றும் புடவைகளை வழங்கினார்.

அப்பொழுது கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒருவருக்கொருவர் பரிசு பொருட்களை வாங்க முந்தியடித்துக் கொண்டு சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

From around the web