தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறைகள் மாற்றம்... ரூ.5 கோடிக்கு டெண்டர்!

 
நாமக்கல்  முதல்வர் அலுவலகம்

சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் இயங்கி வரும் முதலமைச்சர் அறை மற்றும் அவரது செயலாளர்களின் அலுவலகங்கள் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்பட உள்ளன.

முதலமைச்சர், அவரது ஆலோசகர்கள் மற்றும் செயலாளர்களின் அறைகள், நவீன கூட்டரங்குகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காகத் தமிழ்நாடு பொதுப்பணித்துறை சார்பில் ₹5 கோடி மதிப்பீட்டில் அதிகாரப்பூர்வ டெண்டர் கோரப்பட்டுள்ளது. 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் முதலமைச்சர் அலுவலகம் அமைக்கப்படவுள்ளது.

விஜய் பட்ஜெட் முதல்வர்

பழமைவாய்ந்த புனித ஜார்ஜ் கோட்டை முதன்மை கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி காரணமாகவும், நவீன நிர்வாகச் செயல்பாடுகளுக்காகவும் இந்த இடமாற்றம் செய்யப்படுகிறது. 10-வது தளத்தில் இயங்கி வந்த செய்தித்துறை, உள்துறை போன்ற பிற அரசு அலுவலகங்கள் சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கம் மற்றும் மாளிகையின் பிற தளங்களுக்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டு வருகின்றன.

டெண்டர் நடைமுறைகள் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு, புதிய அலுவலகத்திலிருந்து முதலமைச்சரின் அன்றாட நிர்வாகப் பணிகள் தொடங்கும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.