தசரா விடுமுறையில் சோகம்! ஏரியில் குளிக்க சென்ற 3 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி!

 
உபி

 

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு அருகே ஏரியில் குளிக்கச் சென்ற 3 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சிக்கமகளூரு தாலுகா புறநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் தருண், புவன், லிகித். மூவருக்கும் 12 வயது. அங்குள்ள வெவ்வேறு பள்ளிகளில் 6-ம் வகுப்பு படித்து வந்தனர். தற்போது பள்ளிகளுக்கு தசரா பண்டிகை விடுமுறை விடப்பட்டிருந்தது.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

இந்நிலையில், மாணவர்களின் பெற்றோர் வழக்கம்போல் வேலைக்காக வெளியூர் மற்றும் விவசாய தோட்டங்களுக்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில், 3 மாணவர்களும் அதே பகுதியில் உள்ள சிக்ககெரே ஏரிக்கு குளிக்கச் சென்றுள்ளனர்.ஏரியில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மூவரும் ஆழமான பகுதிக்குச் சென்றதாக தெரிகிறது. அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்துள்ளனர்.

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

இதனை பார்த்த அவர்களுடன் சென்றிருந்த நண்பர்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக பெற்றோர் மற்றும் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஏரியில் தீவிரமாக தேடுதல் நடத்தினர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு தருண், புவன், லிகித் ஆகிய 3 மாணவர்களின் உடல்களையும் மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து சிக்கமகளூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தசரா விடுமுறையில் ஏற்பட்ட இந்த சோக சம்பவம் மாணவர்களின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.