பகீர்!! மயக்க மருந்துகொடுத்து ஆண்குழந்தை கடத்தல்!! அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி!!

 
சூர்யகலா

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் வசித்து வருபவர் சுந்தர். இவருக்கு வயது 40. இவர் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.   இவரது மனைவி சூரியகலா. இவர் பிரசவத்திற்காக   கண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  அனுமதிக்கப்பட்டார். அங்கு, கடந்த 3 நாட்களுக்கு முன்பு சூரியகலாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து கருத்தடை செய்து கொள்வதற்காக சூரியகலா வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தார்.

சூர்யகலா
 மாலை 5.30 மணிக்கு    பிரசவ வார்டில்   முன்பின் அறிமுகம் இல்லாத பெண்ணொருத்தி  சூரியகலாவிற்கு சாப்பிட உணவு கொடுத்துள்ளார். இதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் சூரியகலா மயங்கிவிட்டார். உடனடியாக சூரியகலா அருகே இருந்த குழந்தையை தூக்கி சென்றுவிட்டார்.   மயக்கம் தெளிந்து பார்ததபோது, குழந்தை இல்லாததை கண்டு சூரியகலா அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து காவல்துறைக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அனைத்து  சிசிடிவி  காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.   அதில் மொட்டை அடித்த பெண்மணி ஒருவர் குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனை அருகே உள்ள பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.  அந்த பெண்மணி குழந்தையை தூக்கிக்கொண்டு திருவண்ணாமலை செல்லும் அரசு பேருந்தில் ஏறி சென்றது வரை பதிவாகியுள்ளது. அங்கிருந்து   காஞ்சிபுரம் செல்லம் பேருந்தில் ஏறியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் உதவியுடன் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் குழந்தையை கடத்திச் சென்ற பெண்மணி  இறங்கியதை கண்டுபிடித்தனர்.  

போலீஸ்

காஞ்சிபுரம் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு தனிப்படை மூலம்  விரைந்து சென்று  அந்த பெண்மணியை கைது செய்தனர். அத்துடன் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை  தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.  இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு குழந்தையை கடத்தி சென்ற பத்மாவிடம் தீவிர விசாரணை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  வேலூர் அரசு மருத்துவமனையில், மயக்க மருந்து கொடுத்து குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web