மொபைல் போனில் ஆபாசப் படம் பார்த்த 12 வயது சிறுவன், 9 மாதக் குழந்தைக்குப் பாலியல் தொல்லை !
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் புறநகர்ப் பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் தங்களது அன்றாடக் கூலி வேலைக்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாத சூழலைப் பயன்படுத்திய 12 வயது சிறுவன் ஒருவன், தனது கைபேசியில் தடை செய்யப்பட்ட ஆபாசப் பக்கங்களை மிக நீண்ட நேரம் தொடர்ந்து பார்த்துள்ளான். இதனால் ஏற்பட்ட விபரீத புத்தி காரணமாக, அந்த அறையில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த 9 மாதப் பச்சிளம் பெண் குழந்தைக்கு அச்சிறுவன் மிகக் கொடூரமான முறையில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.

மாலையில் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய பெற்றோர், பச்சிளம் குழந்தை கடுமையான வலியால் அழுது கொண்டிருப்பதைக் கண்டு பதறிப்போய் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த தலைமை மருத்துவர்கள், பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த இந்த கொடூர அச்சுறுத்தலை உறுதி செய்து பெற்றோரிடம் விபரத்தைக் கூறினர். இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், உள்ளூர் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து கண்ணீருடன் தங்களது முறைப்படியான புகாரை அளித்தனர்.
பெற்றோரின் புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிசார், பாதிக்கப்பட்ட 9 மாதக் குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றிவிட்டு தங்களது விசாரணையைத் தொடங்கினர். இந்த விசாரணையின் முடிவில் குற்றத்தைச் செய்த 12 வயது சிறுவனைப் போலிசார் தற்பொழுது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்
