குழந்தை இல்லாத ஏக்கம்... மருத்துவர் எடுத்த விபரீத முடிவு!

 
குழந்தை பிரசவம் குழந்தை பிரசவம்

கர்நாடக மாநிலம் மைசூருவில், திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மைசூரு சுபாஷ் நகரைச் சேர்ந்தவர் சையது அகமது சலீம் (44). இவர் மைசூரு மருத்துவக் கல்லூரியில் தங்கி எம்.டி. (M.D.) உயர்கல்வி படித்து வந்தார். இவருக்குத் திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் அவர் கடந்த சில ஆண்டுகளாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். குழந்தை இல்லாத குறையைப் போக்க, இந்தத் தம்பதியினர் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இருப்பினும், தனக்கு என்று ஒரு குழந்தை இல்லையே என்ற ஏக்கம் சலீமுக்குத் தொடர்ந்து இருந்துள்ளது.

பள்ளி மானவி தற்கொலை

இந்நிலையில் ரம்ஜான் நோன்புக்காகச் சுபாஷ் நகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றிருந்த சலீம், நேற்று இரவு தனது அறைக்குச் சென்று கதவைப் பூட்டிக்கொண்டார். இன்று காலை வெகு நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்துப் பார்த்தபோது, அவர் தூக்கில் சடலமாகத் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த என்.ஆர். போலீசார், சலீமின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குழந்தை இல்லாத ஏக்கத்தில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயர் கல்வி பயின்ற ஒரு மருத்துவப் பேராசிரியரே இத்தகைய முடிவை எடுத்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலையில் தூக்கிட்டு தற்கொலை

மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் ஏற்பட்டால், அதிலிருந்து விடுபட மாநில அரசின் உதவி எண் 104 அல்லது சினேகா (044-24640050) போன்ற உதவி மையங்களை அணுகி ஆலோசனைகள் பெறலாம்.