பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைகளைச் சொத்திலிருந்து வெளியேற்றலாம் - உ.பி. அரசு அதிரடிச் சட்டம்!
Aug 27, 2026, 11:55 IST
வயதுமுதிர்ந்த பெற்றோரைப் பராமரிக்கத் தவறும் பிள்ளைகளை அவர்களது சொந்தச் சொத்துக்களில் இருந்து சட்டப்பூர்வமாக வெளியேற்ற வழிவகை செய்யும் புதிய சட்டத் திருத்தத்திற்கு உத்தரப் பிரதேச மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பெற்றோரைப் பராமரிக்கவில்லை என்று இதுதொடர்பாகப் பெறப்படும் புகார்கள் மீது வெறும் 30 நாட்களுக்குள்ளாகவே உரிய மற்றும் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநில அரசு உறுதியளித்துள்ளது.

முதியோர்கள் தங்களது புகார்களை எளிதில் தெரிவிக்கும் வகையில், விரைவில் பிரத்யேக கட்டணமில்லாத் தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதியோர்களின் பாதுகாப்பையும் உரிமையையும் உறுதி செய்யும் இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
